Friday, April 18, 2008

நேபாளி'க்கு போலீஸ் நோட்டீஸ்

நேபாளி படத்தில் காவல்துறையை இழிவுபடுத்துவது போல உள்ள காட்சிகளை உடனடியாக நீக்குமாறு அப்படத்தின் இயக்குநர் வி.இசட். துரைக்கு வட சென்னை காவல்துறை இணை ஆணையர் ரவி வக்கீல் நோட்டீஸ் விடுத்துள்ளார்.

பரத், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்து வெளியாகியுள்ள படம் நேபாளி. இப்பத்தில் காவல்துறையை இழிவுபடுத்துவது போல காட்சிகள் உள்ளதாக சர்ச்ைச எழுந்துள்ளது.

இதையடுத்து இயக்குநர் துரைக்கு வட சென்னை காவல் இணை ஆணையர் ரவி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து இணை ஆணையர் ரவி கூறுகையில், நேபாளி படத்தில் போலீசை அவமதிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. விசாரணை நடத்தப்போகும் இன்ஸ்பெக்டர் கதாநாயகியை கற்பழிப்பது போலவும், அடிக்கடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜட்டியோடு நிற்பது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

போலீசை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இந்த படத்திற்கு அனுமதி கொடுத்த மத்திய அரசின் சென்சார் போர்டுக்கும், இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும்.

நேபாளி படத்தை பார்ப்பவர்களுக்கு போலீசாரை பற்றி மிகவும் தவறான எண்ணம் ஏற்படும். விசாரணைக்கு வரும் போலீசார் மீது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.

போலீஸ் மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அனுமதியோடு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ரவி.

இதற்கிடையே, நேபாளி படம் நீளமாக இருப்பதாகவும், பல காட்சிகள் தேவையில்லாமல் இருப்பதாகவும் பேச்சு எழுந்ததால், அப்செட் ஆன பரத், இயக்குநர் துரையிடம் தேவையில்லாத காட்சிகளை வெட்டி விடுமாறு கோரிக்கை விடுத்தாராம்.

குறிப்பாக சீரியல் கொலைகளுக்கான காரணம் குறித்து படத்தில் சரியான விளக்கம் இல்லாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதையும் சரி செய்யுமாறு துரையிடம் பரத் கேட்டுக் கொண்டாராம்.

இதையடுத்து படத்தின் 2ம் பகுதியில் பல காட்சிகளை நீக்கியுள்ளாராம் துரை. இதன் மூலம் படத்தின் பிற்பாகுதியில் குறைவாக இருந்த விறுவிறுப்பு தற்போது கூடியுள்ளதாம்.

click here
மேலும் படிக்க..

Kuruvi Film

After the film Azhagiya Tamil Magan, Vijay’s next venture is Kuruvi. The film’s director is Dharani who gives a super hit film for Actor Vijay in the film “Gilli” is ready to give another hit. Vijay’s fans are eagerly waiting for his next film. Dharani is meant for giving super hit fast track films, hope his combination with illayathalapathy Vijay works again.

Download Kuruvi Song here

Happy New Year - Sunidhi Chauhan,Yogi B, Dr Burn Year

Dandaana Darna - Sangeeth Althipur

Thaen thaen thaen - Udit Narayanan, Shreya Ghoshal

Palaanadhu Palaanadhu - Vidhyasagar, S Rajalakshmi

Theme Music - Praveen Mani,Dr Burn,Renina,Suvi

Mozha Mozhannu - KK, Anuradha Sriram


click here
மேலும் படிக்க..

Sunday, March 23, 2008

சுபிட்சம் தரும் விஷு வருடம்

சுபிட்சம் தரும் விஷு வருடம்

விஷு வருஷ பலன் வெண்பா

பாரில் விஷு வருடம் பாலருக்குப் பீடை உண்டாம்
கார் பொழிவதில்லை முற் காலத்தில் - ஏரி
பெருகாது பிற்காலம் பெய்யுமே மாரி
இருகால முஞ்சமனென் றென்.

இதன் பொருள்:

இந்த விஷு வருடத்தில் உலகில் குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படுவார்கள். வருடத்தின் முற்பகுதியில் மழை பெய்யாது. ஏரிகளும்,குளங்களும் வற்றும் நிலை ஏற்படும்.

வருடத்தின் பிற் பகுதியில் மழை அமோகமாகப் பெய்யும். விளைச்சல்கள் அதிகரிக்கும்.முற் பகுதியில் குழந்தைகளுக்குப் பிணி, மழையின்மை என்றுசங்கடங்கள் நிறைந்தாலும் மொத்தத்தில் மக்களுடைய பொருளாதார வசதி மேம்பட்டே இருக்கும்.

பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மேற்குறிப்பிட்ட வெண்பா, முற்பகுதியில் மழையில்லை. பிற்பகுதியில் மழை உண்டு என்று சொல்லி மொத்தத்தில் இருபகுதிகளும் சமமாகும் என இந்த வெண்பா குறிப்பிடுகிறது.

விஷு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதம். வெள்ளிக்கிழமை இரவு 9 மணி 32 நிமிடங்களுக்கு பிறக்கிறது. இந்த நேரத்தில் மாதம்பிறப்பதால் உலகிற்கு நன்மைதான் இருக்கும். உலகம் சுபிட்சமாக இருக்கும்.

click here
மேலும் படிக்க..

தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்:

தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்

வேப்பம்பூ பச்சடி:

புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ பச்சடிக்கு தனி இடம் உண்டு. வாழ்வில் இனிப்பும், கசப்பும் சேர்ந்து வரும். ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது.

எல்லாவற்றையும் ஒன்றாக ஏற்றுக் கொண்டு ஒன்றாக பாவிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் முக்கியமான சுவை கொண்டவற்றைகொண்டு வேப்பம்பூ பச்சடி செய்யப்படுகிறது.

தேவையானவை:

மாங்காய் : 2

வெல்லம் : தேவையான அளவு

வேப்பம்பூ : சிறிதளவு

உப்பு : தேவையான அளவு

பச்சைமிளகாய் ; 5

செய்முறை:

மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வேப்பம்பூவை கடாயில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சிறிதளவு நீரில் வெலத்தை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மாங்காயை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பச்சை மிளகாயை வதக்கி மாங்காயில் போட்டு கரைத்து வைத்திருக்கும் வெல்லத்துடன் சேர்த்து கலக்கிஅடுப்பில் வைத்து சூடாக்கவும்.

இதனுடன் உப்பை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் இறக்கி வைத்து, புத்தாண்டு விருந்துடன் இதையும் சேர்த்து பரிமாறி, நீங்களும் சாப்பிடுங்கள்.

வேப்பம்பூ பச்சடி உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

click here
மேலும் படிக்க..

தமிழ் புத்தாண்டு

கிரகங்களில் முதன்மை கிரகம் சூரியன். சூரியனையே அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன. ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் நாள் தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் மட்டுமல்ல, தமிழ் புத்தாண்டும் கூட ஒரு வகையில் சூரியனுக்கு எடுக்கப்படும் விழா தான்.

சூரியனின் சுழற்சியின் அடிப்படையில் தான் புத்தாண்டே கணக்கிடப்பட்டு கொண்டாடப்படுகிறது.

கிரகங்கள் அனைத்திற்கும் தலைமை கிரகம் சூரியன். எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கிறன். தமிழ் நாட்டில் மட்டும்தான்சூரியனுக்கென்று தனி விழாக்கள் எடுக்கப்படுகின்றன.

ஜாதகம் கணிப்பது சூரியனின் உதய, அஸ்தமன அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.

தமிழகத்தின் தமிழ் புத்தாண்டு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளன்று கொண்டடாப்படுகிறது.

மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அவை மேஷராசியில் தொடங்கி மீன ராசியில் முடியும். கிரகங்களின் சுழற்சி கணக்கின்படி சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொருராசிக்கு செல்ல 1 மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.

அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வது 'சங்கரமணம்' என அழைக்கப்படுகிறது. 'மாத சங்கரமணம்'என்பது மாதப் பிறப்பாகும். சூரியன் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில்பிரவேசிப்பது 'வருட சங்கரமணம்'. இது வருடப்பிறப்பாக, புத்தாண்டாககொண்டாடப்படுகிறது.

தமிழர்கள் சூரியனின் சுழற்சி அடிப்படையிலேயே நல்ல நாள், நேரங்கள், முகூர்த்தங்கள்ஆகிய அனைத்தையம் கணக்கிடுவது வழக்கமாக உள்ளது.

புத்தாண்டு தினத்தன்று காலை பஞ்சாங்கத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி பூஜையில்வைக்கப்பார்கள். மாலை பூஜையிலிருந்து எடுத்து பஞ்சாங்கத்தை படிக்கும் வழக்கம்பலநூறு வருடங்களாக இருந்து வருகிறது.

பஞ்சாஙகத்தின் உதவி கொண்டே நல்ல நாள், நேரம், திருமண பொருத்தங்கள் போன்றவைகூறப்படுகின்றன. இதன் காரணமாக பஞ்சாங்கம் தமிழர்களுக்கு மிக இன்றியமையாததாகஉள்ளது.

புதுவருட நாளன்று வீடுகளில் மாக்கோலம் போடப்படும். மாவிலைத் தோரணங்கள்கட்டப்பட்டு வீடுகள் அலங்கரிக்கப்படும்.

புத்தாண்டு நல்லது நடந்தால் வருடம் முழுவதும் நல்லது நடக்கும் என கருதப்படுவதால்,அன்று பலரும் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவார்கள். கோவில்களிலும்புது வருடத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

வரவிருக்கும் விஷு ஆண்டில் எல்லாம் நல்லதாக நடக்க இறைவனை வழிபடுவோம்.

நாட்கள் என்னும் பூக்கள் சிந்தும் புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!

click here
மேலும் படிக்க..