Saturday, February 21, 2009

இலவச விஸ்டா மற்றும் C# மென்நூல்

மைக்ரோசாப்ட் இலவச விஸ்டா மற்றும் C# மென்நூல் இறக்கம் செய்ய கீழே குறிப்பிட்டுள்ள சொடுக்கில் பதிவு செய்து இறக்கம் செய்து கொள்ளுங்கள்



sign up and Download Windows Vista Resource Kit, Second Edition E book.



Sign up and Download Visual C# 2008 Express Edition E book.

click here
மேலும் படிக்க..

Tuesday, February 10, 2009

PHP எண்கணித வினைக்குறி

PHP எண்கணித வினைக்குறி (Arithmetic Operators)

இந்த பதிவில் எண்கணித வினைக்குறி பற்றி பார்ப்போம் அதாவது (Arithmetic Operators)

எண்கணித வினைக்குறி

வினைக்குறி விவரிப்பு எடுத்துக்காட்டு
முடிவு
+ கூட்டல்
x=2
x+2
4
- கழித்தல்
x=2
5-x
3
* பெருக்கல்
x=4
x*5
20
/ வகுத்தல்
15/5
5/2
3
2.5
% Modulus (வகுத்தல் மீதி)
5%2
10%8
10%2
1
2
0
++ அதிகரித்தல்
x=5
x++
x=6
-- குறைத்தல்
x=5
x--
x=4

மேலே உள்ள வினைக்குறிகளுக்கு இன்று எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் .

அதிகரித்தல் மற்றும் கூட்டல்

$X++ இதன் பொருள் X=X+1 அதே போல் $Y+2 இதன் பொருள் y=y+2


எடு .கா


<?php

$x=1;
$x++;

$y=2;
$y=$y+1;

echo "Addition : x:".$x;
echo'<br/>';
echo "Addition : Y:".$y;
echo'<br/>';
?>



இதன் வெளியீடு X : 2 Y :3


குறைத்தல் மற்றும் கழித்தல்

$X-- இதன் பொருள் X=X-1 அதே போல் $Y-2 இதன் பொருள் Y=Y-2

எடு .கா


<?php

$x=3;
$x--;

$y=3;
$y=$y-1;

echo "Subtraction : x:".$x;
echo'<br/>';
echo "Subtraction : Y:".$y;
echo'<br/>';
?>


இதன் வெளியீடு X : 2 Y: 2


பெருக்கல்

$X*5 இதன் பொருள் x=x*5 சாதரணமாக $x=$x*$y என்று கொடுப்போம் ஆனால் இங்கே ஒரே ஒரு மாறியில் பெருக்கலை செய்கிறோம் .

எடு கா :

<?php

$x=4;
$x*5;

echo "Multiplication : x:".$x;

?>


இதன் வெளியீடு X: 20 


வகுத்தல்

இதில் அதிகம் விளக்க டேத்வை இல்லை என்று நினைக்குறேன்.
எடு .கா

<?php

$x=10;
$x/2;

echo "Divison : x:".$x;

?>


இதன் வெளியீடு X: 5


Modulus (வகுத்தல் மீதி)

இந்த வினைக்குறி நீங்கள் வகுத்தல் செய்யும் போது அதன் மீத தொகையை(Reminder) கொடுக்கும் .

எடு கா.

<?php

$x=10;
$x/8;

echo "Modulus : x:".$x;

?>


இதன் வெளியீடு X: 2

PHP பாடங்கள் தொடரும் ......

click here
மேலும் படிக்க..

மைக்ரோசாப்ட் virtualization solutions இலவச மென்நூல்

மைக்ரோசாப்ட் press - மைக்ரோசாப்ட் virtualization solutions என்ற இலவச மென்நூலை தருகிறது ஆர்வம் உள்ளவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய உங்களிடம் LIVE ID அல்லது hotmail கணக்கு வேண்டும்.



நீங்கள் தரவிறக்கம் செய்ய பதிவு செய்து தரவிறக்கம் செய்ய வேண்டும்

தரைறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

click here
மேலும் படிக்க..

Sunday, February 8, 2009

9 வயது சிறுவன் உலகத்தை கலக்குகிறான்

9 வயது சிறுவன் ஒரு iPhone மென்பொருள்(Doodle kids) எழுதியுள்ளான் அவனது மென்பொருள் 4,000 முறை Apple store இல் இருந்து இறக்கம் செய்யப்பட்டுள்ளது.



சரி யார் அந்த சிறுவன் ?

லிம் டிங் வெண் என்ற சிங்கப்பூர் வாழ் மலேசிய சிறுவன் இந்த சாதனையை செய்துள்ளான்.

இச் சிறுவன் தனது 2 வயதில் hard disk எப்படி insert செய்வது booting செய்வது பற்றி தெரிந்து கொண்டான் என்று அவனது தந்தை குறிப்பிட்டுள்ளார் .

அவனது தந்தை சிறுவனின் ஆர்வத்தை பார்த்து 7 வது வயதில் programming(நிரல்கள்) எழுவது எப்படி என்று கற்று கொடுக்க ஆரம்பித்தாரம்.

இச் சிறுவன் தனது 9 வயதில் தனது இளைய சகூதிரிகளுக்கு (Doodle Kids) என்ற paint நிரலை எழுதியுள்ளான் அதுவே எல்லோருக்கும் பிடித்துபோக உலகமே இச் சிறுவனை World Yongest iPhone Developer என்று புகழ்ந்துள்ளனர்.

அது மட்டும் இல்லை இச் சிறுவன் இப்பொழுதே 20 programming project முடித்துள்ளனாம்.



click here
மேலும் படிக்க..

Saturday, February 7, 2009

PHP வினைக்குறி

வணக்கம் வாசகர்களே போன பதிவில் PHP சரங்கள் மற்றும் அதன் சில செயற்கூறுகளை பார்த்தோம். இந்த பதிவில் PHP வினைக்கூரிகளை பற்றி பார்ப்போம்.

PHP வினைக்குறி (operators)

Arithmetic Operators [எண்கணித வினைக்குறி]
Assignment Operators [ஒப்படைப்பு வினைக்குறி]
Comparison Operators[ஒப்பீடு வினைக்குறி ]
Logical Operators[தர்க்கவியல் வினைக்குறி]


எண்கணித வினைக்குறி

வினைக்குறி விவரிப்பு எடுத்துக்காட்டு
முடிவு
+ கூட்டல்
x=2
x+2
4
- கழித்தல்
x=2
5-x
3
* பெருக்கல்
x=4
x*5
20
/ வகுத்தல்
15/5
5/2
3
2.5
% Modulus (வகுத்தல் மீதி)
5%2
10%8
10%2
1
2
0
++ அதிகரித்தல்
x=5
x++
x=6
-- குறைத்தல்
x=5
x--
x=4

ஒப்படைப்பு வினைக்குறி

வினைக்குறி
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டின் விளக்கம்
= x=y x=y
+= x+=y x=x+y
-= x-=y x=x-y
*= x*=y x=x*y
/= x/=y x=x/y
.= x.=y x=x.y
%= x%=y x=x%y


ஒப்பீடு வினைக்குறி

வினைக்குறி
விவரிப்பு
எடுத்துக்காட்டு
== is equal to 5==8 returns false
!= is not equal 5!=8 returns true
> is greater than 5>8 returns false
< is less than 5<8>
>= is greater than or equal to 5>=8 returns false
<= is less than or equal to 5<=8 returns true


தர்க்கவியல் வினைக்குறி

வினைக்குறி
விவரிப்பு
எடுத்துக்காட்டு
&& and x=6
y=3

(x <> 1) returns true

|| or x=6
y=3

(x==5 || y==5) returns false

! not x=6
y=3

!(x==y) returns true


மேலே குறிபிட்டுள்ள வினைக்குறிகளில் ஏதனும் சந்தேகம் இருந்தால் பின்னோட்டம் இடவும்

வினைகுறிகளுக்கு எடுத்துக்காட்டு அடுத்த பதிவில் தொடரும்...

click here
மேலும் படிக்க..

Thursday, February 5, 2009

உங்கள் நண்பன் எங்கே ?

நாம் அடிக்கடி நம் நண்பர்களுக்கு SMS செய்யும் இந்த வாசகம் where r u ? இந்த வாசகத்துக்கு முழுக்கு போட்டது கூகிள் அமாங்க !

Google Latitude என்ற புது சேவையை ஆரம்பித்துள்ளது இது Google maps ன் தொடர்புடைய சேவை.

இதன் மூலம் உங்கள் நண்பன் எங்கே இருக்கான் என்ற விவரத்தை இதன் மூலகமாக தெரிந்து கொள்ளலாம்.





List of mobile phones supporting Google Latitude

* Color Blackberry devices
* Windows 5.0 + Mobile Devices
* Symbian S60 devices (Nokia smartphones)

Coming Soon for

* iPhone and iPod touch devices
* Android-powered devices
* Java-enabled (J2ME) mobile phone

Visit : Google Latitude

click here
மேலும் படிக்க..

PHP சரங்கள்

வணக்கம் அன்பு வாசகர்களே நேற்று PHP மாறியின் விதிகளை பார்த்தோம் இன்று PHP Strings (சரங்கள்) பற்றி பார்ப்போம் .

String variables are used for values that contains character strings.

String Variables என்பது மாறியை குறிக்கிறது, மாறியனது ஒரு எழுத்தோ , எண்களையோ வைத்திருக்கலாம்.

PHP சரத்தின் எடுத்துக்காட்டு :


<?php
$txt="Hello World";
echo $txt;
?>

இதன் வெளியீடு (Output) : Hello World


ஒரு சில PHP String Functions (சர செயல்கூறுகளை) பார்போம்

strlen() function

இந்த strlen() செயல்கூறு ஒரு சரத்தின்(String) நீளத்தை அளக்கும்.

எடு. கா நிரல்


<?php
echo strlen("Hello world");
?>

இதன் வெளியீடு (Output) : 11

இதில் HELLO WORLD என்ற வாசகத்தில் HELLO(5 வார்த்தைகளை கொண்டது ) World(5 வார்த்தைகளை கொண்டது ) ஆகா மொத்தம் 10 இதன் வெளியீடு (Output) மட்டும் எப்படி 11 என்று வந்தது ? HELLO க்கும் WORLD க்கும் நடுவே ஒரு இடை வெளி இருப்பதால் அதையும் ஒரு எழுத்தாக கணக்கு எடுத்துக்கொள்ளும் .


எப்படி இரு மாறியில் உள்ள வாசகங்களை ஒன்றாக இணைத்து அச்சிடுவது பற்றி பார்ப்போம்.

நாம் Hello World 1234 என்று அச்சிட வேண்டும் அதற்காக எப்படி நிரல் எழுவது ?


<?php
$txt1="Hello World";
$txt2="1234";
echo $txt1 . " " . $txt2;
?>


இதில் $txt1 & $txt2 என்ற இரண்டு மாறியிலும் தகவல்களாக இருக்கின்றன அவையை அப்படியே ஒன்றாக இணைத்து ஒரே வரியில் அச்சிட செய்ய
echi $txt1." ".$txt2 என்று கொடுக்க வேண்டும்.

இங்கே இரண்டு மாறியை இணைத்து அச்சிடுகையில் செய்கையில் புள்ளி . வைத்தால் இரண்டும் ஒன்றாக இணைத்து அச்சிடும் நடுவில் " " என்ற (Double Quotes) இரு மாறிக்கு நடுவில் ஒரு இடைவெளியை ஏற்படுதிக்றது.

இதனால் நமக்கு தேவையான வெளியீடை வர வைக்க முடியும்.

strpos() function


இந்த strpos() செயல்கூறு வாசகத்தில் இருக்கும் சரத்தை தேட அல்லது எழுத்தை கண்டுபிடிக்க உதவும்.


<?php
echo strpos("Hello world!","world");
?>

ஒரு வாசகத்தில் இருக்கும் world என்ற சரத்தின் நிலைப்பாட்டைஅறிந்து கொள்ள strpos() என்ற செய்யற்கூரில் வாசகத்தையும் அதை தொடர்ந்து நடுவில் ஒரு கால் புள்ளி (comma), போட்டு சரத்தையும் கொடுத்தால் அதன் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.

இதன் வெளியீடு : 6

PHP பாடங்கள் தொடரும்....

click here
மேலும் படிக்க..

Wednesday, February 4, 2009

PHP மாறியின் விதிமுறைகள்

நேற்று PHP யின் அடிநிலை இலக்கணம் பற்றி பார்த்தோம், இன்று PHP மாறியின் விதிமுறைகளை பார்ப்போம்.

எல்லா மொழிகளிலும் ஒரு மாறியை உபோயோகபடுதும் போது அந்த மாறி எந்த வகையை சார்ந்தது என்று குறிப்பிட வேண்டும்

எடு. கா

int c; என்று c மொழியில் குறிப்பிட வேண்டும் ஆனால் PHP யில் தேவை இல்லை

PHP தானாகவே வகையை declare செய்து கொள்ளும்.

1. ஒரு மாறி தொடங்கும் போது எழுத்தாக அல்லது underscore _ இருக்கலாம் .

2. ஒரு மாறி எண்ணெழுத்து (alphanumeric) அல்லது underscores இருக்கலாம் a-z, A-Z, 0-9, and _ )

3. ஒரு மாறி(variable)க்கு இடையில் தேவை இல்லாத இடைவெளி இருக்ககூடாது.
($my_string), or ($myString) இப்படி இருக்கலாம் .

PHP பாடங்கள் தொடரும் ......

click here
மேலும் படிக்க..

Tuesday, February 3, 2009

கூகிள் இணைய பேருந்து திட்டம்

தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி கூகிள் இணைய பேருந்து திட்டம் (Google The Internet Bus Project) என்ற தலைப்பில் இணையத்தை பத்தி தமிழக மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்த முக்கியமான ஊருக்கு Google பேருந்து வர போகுதுங்க !

The Internet Bus Project is an attempt educate people about what the Internet is, and how it may be beneficial to their lives, by taking the Internet experience to them through a customised Internet-enabled bus, which will travel to several towns and cities across India.

இன்று இதன் தொடக்கம் ! சென்னையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது !




















அனைத்து வழித்தடங்களின் வழிகளை காண இங்கே சொடுக்கவும்

ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு நாட்களில் இந்த பேருந்து வந்து சேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

03 Feb Chennai
05 Feb Vellore
06 Feb Krishnagiri
07 Feb Salem
11 Feb Erode
12 Feb Tiruppur
14 Feb Coimbatore

18 Feb Dindigul
19 Feb Madurai
23 Feb Tirunelveli
25 Feb Nagercoil
27 Feb Tuticorin
02 Mar Pudukkottai
03 Mar Tiruchirappalli

06 Mar Thanjavur
08 Mar Kumbakonam
10 Mar Neyveli
12 Mar Cuddalore
13 Mar Tiruvannamalai

click here
மேலும் படிக்க..

கூகிள் உலகம் இப்போது கடலுக்கு அடியிலும்

கூகிள் உலகம்(Google Earth) இப்போது கடலுக்கு அடியிலும் !

Google Earth புதிய version (காட்சி) Google Earth Beta 5.0 இதில் கடலுக்கு அடியில் இருக்கும் தகவல்களும் தருகிறது, கூகிள் என்னும் மலை தனது சேவையை விரிவுப்படுதிக்கொண்டே போகிறது .

What is Google Earth ?

Google Earth is an desktop application which lets you fly anywhere on Earth to view satellite imagery, maps, terrain, 3D buildings, from galaxies in outer space to the canyons of the ocean.

What’s New in Google Earth 5.0 ?



Explore the Ocean in Google Earth 5.0



Download Google Earth 5.0 Beta

click here
மேலும் படிக்க..

PHP யின் அடிநிலை இலக்கணம்

வணக்கம் அன்பு வாசகர்களே, நேற்று PHP எப்படி செய்யல்படுத்துதல் பற்றி பார்த்தோம்.

இன்றில் இருந்து பாடங்கள் துவங்கிறது.

* PHP யின் அடிநிலை(Basic) இலக்கணம்(Syntax) பற்றி இன்று பார்ப்போம்.

ஒரு PHP நிரல் (program) எழுதும் போது

1. <?php என்று ஆரம்பித்து ?>என்று முடிக்க வேண்டும்,இதை PHP block (கட்டம்) என்று குறிப்பிடுவர்.

2. இந்த PHP block (கட்டம்) PHP கோப்பில் எங்கும் பயன்படுத்தலாம்.

3. variables (மாறி) இருந்தால் மட்டுமே ஒரு நிரல் (program) எழுத முடியும்

மாறி(variable) என்றால் என்ன ?

மாறி என்பது ஒரு தகவலை சேமிக்க பயன்படும், அந்த தகவல் ஒரு எழுத்தாக இருக்கலாம், அல்லது எண்களாக இருக்கலாம், அல்லது அணிகளாக(arrays) இருக்கலாம் .

4. ஒவ்வொரு மாறிக்கு(variable) முன்னால் $ என்ற குறியீடு இருக்க வேண்டும்

5. PHP கட்டத்துக்குள் இருக்கும் ஒவ்வொரு வரிகளும் அரைப்புள்ளியுடன் (;) முடிவடைய வேண்டும்.

எடுத்துக்காட்டு :


<html>
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8" />

<title>Testing PHP controls</title>

</head>
<body bgcolor="#FFFFFF">

<?php
$variable ="ToTheTech.Com - PHP யின் அடிநிலை இலக்கணம்";
echo $variable;
?>
</body>
</html>
இதை test-run.php என்று சேமிக்கவும், பிறகு செய்யல்படுத்த நேற்று சொன்ன வழிமுறைகளை பின்பற்றவும்.

மேலே குறிப்பிட்டுள்ள நிரலில் (Program) $variable என்பது மாறி (variable) .
echo என்பது output print செய்ய உதவும் கட்டளை, "Double Quotes" அல்லது ஒரு மாறியை குறிப்பிட்டு print செய்யலாம் .

முதலில் நாம் $variable என்ற மாறியில் நமக்கு தேவையானவற்றை சேமித்து கொள்வோம் பிறகு அந்த variable print செய்ய echo கட்டளையை பயன்படுத்திகிறோம் .

PHP பற்றி பாடங்கள் அடுத்த பதவில் தொடரும்...

click here
மேலும் படிக்க..

Monday, February 2, 2009

மைக்ரோசாப்ட் விர்சுவல் டெக் நாட்கள் பிப் 18-19, 2009

எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

Register for Virtual TechDays Feb. 18-19, 2009

Join us at this free online event to discover the latest technology offerings. Join the LIVE interactive sessions with technology demos by experts during Virtual TechDays


மைக்ரோசாப்ட் விர்சுவல் டெக் நாட்கள் பிப் 18-19, 2009 நடக்கயிருக்கிறது ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

இது ஒரு இணைய வழி நிகழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் தகவல்களுக்கு www.virtualtechdays.com

ஏதேனும் இதை பற்றி தகவல் தெரிந்தால் பின்னோட்டம் இடவும்
நன்றி,

ToTheTech.Com

click here
மேலும் படிக்க..

PHP எப்படி வேலை செய்கிறது ?

வணக்கம் வாசகர்களே நேற்று PHP மற்றும் அதன் தேவை பற்றி பார்த்தோம். இன்று PHP எப்படி வேலை செய்கிறது ? பற்றி பார்ப்போம்.

முதலில் PHP என்றால் என்ன ?

PHP = Personal Home Page என்று முதலில் இருந்தது இப்பொழுது அதை (Hyper text Pre-processor) என்று மாற்றி விட்டார்கள்.

இந்த Hyper text Pre-processor என்றால் என்ன ?

இந்த வார்த்தையை நன்கு படித்தால் புரியும், Hyper text பெரும்பாலும் நாம் இணைய உலாவி பயன்படுத்தும் பொது நீங்கள் உங்கள் உரல் உற்று பார்த்தால் அங்கு HTTP:// என்று முகவரிக்கு முன்னால் இருக்கும்.

HTTP: HYPER TEXT TRANSFER PROTOCOL என்று அழைப்பார்கள்.

சரி இந்த HTTP க்கும் Hyper text Pre-processor க்கும் என்ன சம்பந்தம் ?

HTTP : இந்த protocol packets ஐ text வடிவத்தில் அனுப்புகிறது.

Hyper Text Pre-Processor அந்த text வடிவத்தை உருவாக்குகிறது (HTML STREAM), கீழே உள்ள படத்தை பாருங்கள்.



இதில் முதலில் எழுதிய HTML program நேரடியாக client க்கு HTML Stream ஐ அனுப்புகிறது ஆனால் PHP code (சிவப்பு நிறத்தில் இருப்பது) மட்டும் PHP engine க்கு சென்று பிறகு HTML Stream மகா Client (பயனாளருக்கு) அனுபப்படுகிறது.

நேற்று சொன்ன xampp பொதியை install செய்து இருந்தால் இன்றைக்கு அதை எப்படி உபயோகிப்பது பற்றி பார்ப்போம்.

நீங்கள் install செய்த folder க்குள் htdocs என்ற ஒரு folder இருக்கும் (எடு. கா : D:\server\htdocs)

இங்கே ஒரு புதிய file Notepad மூலமாக open பண்ணவும் சேமிக்கையில் extension .php என்று சேமிக்கவும் .

(எடு . கா )

first-run.php



பெரிதாக படத்தை பாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

சேமித்த first-run.php என்ற கோப்பை notepad மூலமாக திறக்கவும்.

அங்கு கீழே உள்ள code அப்படியே பார்த்து type பண்ணவும், பிறகு சேமிக்கவும்.



பிறகு உங்கள் xampp செர்வரை இயக்கவும் , இன்ஸ்டால் செய்த இடத்தில் Xampp-control என்ற file இருக்கும் அல்லது desktop ல் xampp-control icon இருக்கும் open செய்து கீழே உள்ள படத்தை பாருங்கள்.



Apache மற்றும் mysql ஐ start பண்ணவும்.

பிறகு உங்கள் இணைய உலாவியில் http://localhost/first-run.php என்று இந்த URL ஐ type செய்யவும் .

கீழே உள்ள படத்தை போல் உங்களுக்கு உலாவியில் வரும்.


உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தால் http://localhost சென்று Xampp-control panel சுத்தி பார்க்கவும்.

அடுத்த பதிவில் PHP பாடங்கள் தொடரும் ....

click here
மேலும் படிக்க..

Sunday, February 1, 2009

வெப்சர்வர் மற்றும் PHP யின் தேவை

வணக்கம் அன்பு வாசகர்களே, வெப்சர்வர் மற்றும் PHP யின் தேவை பற்றி இன்று பார்ப்போம்.

Yahoo ! இண்றைக்கு யாஹூ ஒரு பெரிய நிறுவனம் ஆரம்ப காலத்தில் எப்படி அவர்கள் தளத்தை உருவாகினார்கள் ?

ஆரம்பகாலத்தில் HTML என்று சொல்லப்படும் language மட்டுமே பயன்படுத்தி யாஹூ தன் தளத்தை வடிவமைத்தது ஆனால் அந்த தளத்தை யார் வேண்டுமானாலும் edit செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருந்தது .

பிறகு பல language கள் வந்தன PERL, CGI போன்ற மொழிகள் வந்தன ஆனால் இந்த மொழிகள் மிகவும் கடினமாக இருப்பதாக ஒரு கருத்து .

கடைசியில் PHP என்ற மொழியை கண்டுபிடித்தார்கள் . (PHP யின் முழு வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் )

PHP started life and is still primarily used as a server-side HTML-embedded scripting language.

PHP என்பது வழங்கியல் (server) வழி HTML லில் உள்ளே செலுத்தும் விரிவுரை செய்யப்பட்ட மொழி.

சரி இந்த PHP எப்படி வேலை செய்கிறது ?

உங்களுக்கு HTML மொழி மற்றும் C Language தெரிந்தால் போதும் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

HTML மொழி எப்படி வேலை செய்கிறது ?


படத்தில் காணப்படுவதை போல HTML code எழுதினால் நீங்கள் எந்த கணினியிலும் ஒரு HTML கோப்பை திறக்கலாம், output பாக்கலாம், edit செய்யலாம்.

ஆனால் PHP அப்படி இல்லை இதற்க்கு PHP என்ஜின் என்று சொலப்படும் ஒரு மென்பொருள் (சுருக்கமாக apache + PHP engine வெப்சர்வர் தேவை )



இப்பொழுது உங்களிடம் ஒரு PHP file இருந்தால் அதை சாதரணமாக திறந்தால் வேலை செய்யது இதற்கு பல குழுமங்கள் இதற்கென சர்வர் side மென்பொருளை தருகின்றன, எனக்கு மிகவும் பிடித்த xampp என்று சொல்லப்படும் இலவச பொதி(package) இறக்கம் செய்து install செய்து கொள்ளுங்கள் இந்த வெப்சர்வர் பொதியில்(Package) PHP, MySQL, PERL, FTP, Apache போன்ற மென்பொருள்கள் அடங்கும்.

கீழே உள்ள சுட்டியில் சென்று இறக்கம் செய்து கொள்ளுங்கள் பெரும்பாலும் எல்லா வகையான இயங்குதளங்களுக்கு கிடைக்கும்.

http://www.apachefriends.org/en/xampp.html

அடுத்த பதிவில் PHP பற்றி தொடரும் ....

click here
மேலும் படிக்க..

Friday, January 30, 2009

கூகிள் குரோம் விளம்பர காணொளி

click here
மேலும் படிக்க..

Saturday, January 24, 2009

எளிதாக ஜிமெயில் மின்னஞ்சலை இறக்கம் செய்ய

உங்கள் மின்னஞ்சலில் நிறைய படங்கள் மற்றும் வீடியோ உள்ளனவா ? எப்படி எளிதாக இறக்கம் செய்வது ?

இங்கே POP3 என்று சொல்லப்படும் வசதியின் மூலமாக நாம் எளிதில் ஜிமெயில் மின்னஞ்சலை இறக்கம் செய்யலாம்

கீழே உள்ள வீடியோவை பாருங்கள் எளிதாக புரியும்.

click here
மேலும் படிக்க..

Friday, January 23, 2009

(BSNL) மாநில வாரியாக தொலைபேசி என்கள்

92-xx-yyyyyy - Tata Indicom CDMA mobile
93-xx-yyyyyy - Reliance CDMA mobile
94-xx-yyyyyy - BSNL CellOne GSM mobile
97-xx-yyyyyy - Various Operators GSM mobile ( Except Tata, RIM & Bsnl )
98-xx-yyyyyy - Various Operators GSM mobile ( Except Tata, RIM & Bsnl )
99-xx-yyyyyy - Various Operators GSM mobile ( Except Tata, RIM & Bsnl )


அந்தமான் & நிகோபார் தீவுகள் (A&N) 9479, 9432

அந்தர பிரதேஷ் (AP) 9473 , 9440, 9441

அஸ்ஸாம் 9478

பீகார் 9475, 9431

சட்டிஸ்கர் 9425

சென்னை 9470, 9444

கொல்கத்தா 9481

குஜராத் 9457,9426,9427

ஹர்யான 9466, 9416

ஹிமாச்சல் பிரதேஷ் (HP) 9451,9418

ஜம்மு & காஷ்மீர் (J&K) 9452,9419

கர்நாடக 9471, 9448,9480

கேரளா 9472, 9447

மத்ய பிரதேஷ் (MP) 9458,9425,9424

மகாராஷ்டிரா 9456, 9422

North East (NE) states 9477

ஒரிசா 9476, 9437

பஞ்சாப் 9463, 9417,9464

ராஜஸ்தான் 9459, 9414,9460

தமிழ் நாடு (TN) 9480, 9443,9442

உத்தர் பிரதேஷ் (UP) East 9455, 9415

உத்தர் பிரதேஷ் (UP)West 9454, 9412

மேற்குவங்கம் (WB) 9474, 9434

click here
மேலும் படிக்க..

எளிதாக ஆங்கில எழுத்துக்களை குரலாக அனுப்புங்கள்

எளிதாக ஆங்கில எழுத்துக்களை குரலாக நண்பரின் மின்னஞ்சலாக அனுப்புங்கள்.

இதற்கென ஒரு இணையதளம் இயங்குகிறது.







நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவர் மற்றும் செய்தியை தட்டச்சில் அடித்து (Speak ) என்று சொடுக்கினால் போதும்.

http://beta.blindspeak.com

click here
மேலும் படிக்க..

Thursday, January 22, 2009

ஜிமெயில் அரட்டையில் யூடியுப் வீடியோவை பார்க்கலாம்

ஜிமெயில் புதிய வசதியை அறிமுக படுத்தியுள்ளது , நீங்கள் யூடியுப் வீடியூவை ஜிமெயில் அரட்டையில் பார்த்து பகிர்ந்து கொள்ளல்லாம் .





நான் என் நண்பனிடம் ராங்கி ரங்கம்மா படிக்காதவண் பட வீடியோவை பகிர்ந்து கொண்டேன்.

யூடியுப் வீடியோ சுட்டியை உங்கள் ஜிமெயில் அரட்டையில் அனுப்பிநால் போதும் நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே நேரத்தில் வீடியோவை பார்க்கலாம்.

click here
மேலும் படிக்க..

Wednesday, January 21, 2009

யூடியுபில் எளிதில் விடியோவை இறக்கம் செய்வது எப்படி

வாசகர்களே youtube.com வீடியோ தளம் எல்லோரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்குறேன் .

நீங்கள் youtube.com என்னும் வீடியோ சுட்டிக்கு முன்னால் pwn என்று சேர்த்து ஓகே கொடுத்தால் போதும் உங்களுக்கு பிடித்த வீடியோ இறக்கம் செய்து கொள்ளலாம் .




1. View a video on YouTube.
2. In the URL location box, type pwn in front of youtube, and enter.
3. Get links to download the video


click here
மேலும் படிக்க..

Monday, January 19, 2009

விண்டோஸ் 7 (Shortcut Key) மற்றும் (Music Library)

* Windows+1 launches the first application on the left
* Windows+2 launches the second application from the left

* Windows+P which opens a pop-up as shown above picture in computer and switching from single monitor to dual-display.
* Windows + Shift + Left Arrow – Move the window to the screen on the left.
* Windows +Shift+Right Arrow – Move the window to the screen on the right.

# Win+Home – Minimize all windows except the current active window
# Win+Left Arrow and Win+Right Arrow – Resizes windows based on the new Win7 window docking feature;
# Win+Up Arrow and Win+Down Arrow maximizes and restores / minimizes;
# Win+Shift+Up Arrow and Win+Shift+Down Arrow maximizes and restores the vertical size.
# Win+T – This is like “alt-tabbing” through the Peek menus. Once you hit Win+T you can use the arrow keys to navigate left right and up the windows tree.
# Win+Space – By pushing this is and hold the Win-key, you can peek at your desktop without dragging it to the bottom right corner
# CTRL+shift +click – when you click on an application while hold CTRL+shift, it will run with elevated permissions i.e. Administrator Privileges.



Windows 7 Keyboard Shortcuts Video



Windows 7 Music Library video



click here
மேலும் படிக்க..

Sunday, January 18, 2009

இணைய பெயரை எப்படி உபயோகிப்பது? -2

வாசகர்களே நேற்று இணைய பெயரை எப்படி உங்கள் வலைப்பூவிற்க்கு அமைத்தல் பற்றி நேற்று பார்த்தோம் .

இன்று (DNS Control) இல்லாத வாசகர்கள் எப்படி உங்கள் இணைய பெயரை உங்கள் வலைப்பூவிற்க்கு அமைத்தல் பற்றி பார்ப்போம்.

(Zoneedit) என்னும் இலவச (DNS Control) சேவை செய்து வரும் நிறுவனத்திடம் நீங்கள் முதலில் உங்கள் இணைய பெயர், பயணாளர் பெயர் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும் .

பிறகு உங்களுக்கு activation மின்னஞ்சல் வரும் அதை activate செய்த பின் Zoneedit கணக்கில் சென்று உங்கள் இணைய பெயரை தேர்ந்த்தெடுத்த பின் அங்கே (View) என்று ஒரு சுட்டி இருக்கும் அதை சொடுக்கினால்

உங்களுக்கென ஒரு (Name Server) கொடுக்கப்பட்டிருக்கும், அந்த இரண்டு (Name Server ஐ ) உங்கள் இணைய பதிவாளர் கணக்கில் சென்று மாற்றுங்கள்.

(எ .டு .கா )

ns15.zoneedit.com
ns13.zoneedit.com

பிறகு (Zoneedit)கணக்கில் (Webforward) என்ற தேர்வு சுட்டி இருக்கும் அதை தேர்ந்தெடுத்த பின்

அதில் இரண்டு களங்கள் இருக்கும் (New Domain) மற்றும் (Destination) இருக்கும்

(New Domain) : அதில் எதுவும் செய்ய வேண்டாம்

(Destination): அதில் உங்கள் இணைய பெயரை (எ .டு .கா ) http://www.tothetech.com என்று மாற்றி (Add New) என்று சொடுக்கவும் .





பிறகு (Zoneedit) கணக்கில் Aliases (CNAME) என்ற தேர்வு சுட்டி இருக்கும் அதை தேர்ந்தெடுத்து

அதில் இரண்டு களங்கள் இருக்கும் (Alias) மற்றும் (Actual Name)

(Alias) : இதில் (www) என்று களத்தில் நிரப்பவும் .

(Actual Name) : இதில் (ghs.google.com) என்று நிரப்பவும்.

பின் (Add New Alias) என்ற பத்தானை சொடுக்கவும் .




பிறகு உங்கள் பிளாக்கர் சென்று settings --> tab இல் --> Publishing தேர்ந்தெடுங்கள்.



அதில் custom domain தேர்வு செய்தபின் அடுத்த பக்கத்தில் பிளாக்கர் புதிய பெயர் வேண்டுமா என்று கேட்கும் அதற்க்கு அருகில் (Switch to advanced settings) தேர்ந்தெடுங்கள்.






பிறகு advanced settings ல் உங்கள் இணைய பெயரை (எ .டு .கா ) http://www.tothetech.com என்று மாற்றி சேமித்து விடுங்கள் .


இப்பொழுது உங்கள் வலைப்பூ புதிய பெயருடன் வலம் வரும்.

குறிப்பு : நீங்கள் மாற்றம் செய்த அனைத்தும் 24-48 மணிநேரத்துக்குள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

click here
மேலும் படிக்க..

Saturday, January 17, 2009

இணைய பெயரை எப்படி உபயோகிப்பது ? -1

வாசகர்களே நேற்று இணைய பெயர் எங்கே பதிவு செய்வது பற்றி தெரிந்துகொண்டோம் .

நண்பர் அறிவழி நான் எழுதிய பதிவை படித்து அவர் தன்னக்கென இணைய பெயர் (Godaddy) யில் தன்னுடைய பெயரை பதிவு செய்தார்.

அவர் குறைந்தது (10-15) நிமிடங்கள் செலவிட்டிருப்பார், கடன் அட்டை இருந்ததால் வேலையை உடனடியாக முடித்துவிட்டு என்னை (Google டாக் யில் ) அழைத்து நான் பதிவு செய்துவிட்டேன் ஆனால் என்னுடைய இணைய பெயரை திறந்தால் ஏதோ ஒரு பக்கத்தை காட்டுகிறது என்றார், மேலும் arivili.com என்னுடைய வலைப்பூவை திறக்க வேண்டும் என்றார்.

நீங்கள் உங்கள் இணைய பெயரை பிளாக்கர் வழியாக பதிவு செய்யாமல் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளை உங்கள் இணைய பெயர் பதிவாளரிடம் செய்ய வேண்டும் .

சாதரணமாக இணைய பதிவாளர்கள் (name server) என்று சொல்லப்படும் ஒரு தேர்வை மட்டும் கொடுப்பார்கள் அவர்களிடம் இணைய பெயர் விலை குறைவாக கூட இருக்கலாம் ஏன் என்றால் ஒரு சில வசதிகள் இல்லை .

நீங்கள் Godaddy அல்லது வேறு பெரிய நிறுவனத்திடம் பதிவு செய்திருந்தால் அவர்கள் உங்களுக்கென இணையபெயர்க்கு தேவையான அனைத்து வசதிகள் இருக்கும்.

உங்கள் இணைய பதிவாளர் (Godaddy) கணக்கில் சென்று பாருங்கள் அங்கே இரண்டு தேர்வுகள் இருக்கும்.

1. Name Server
2. Managed DNS (or) DNS control and MX control

இங்கே நமக்கு தேவையானது (DNS control) உங்களிடம் DNS control இல்லை என்றால் உங்கள் பதிவாளரை அணுகி கேள்வியை கேளுங்கள் .

நீங்கள் Godaddy யில் பதிவு செய்து இருந்தால் கண்டிப்பாக இந்த தேர்வு இருக்கும்
உங்கள் கணக்கில் சென்று உங்கள் இணைய பெயரை திறந்தால் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கட்டுப்பாடு இருக்க வேண்டும்



அதில் Name Server என்று ஒன்று இருக்கும் அதில் நீங்கள் எதவும் செய்ய வேண்டாம் Godaddy உங்களுக்கென அவர்களே (nameserver) அமைப்புகளும் செய்து வைத்திருப்பார்கள்.



அதற்க்கு கீழே Forwarding மற்றும் DNS control என்று இருக்கும் அதில் இரண்டிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும்

Forwarding தேர்ந்தெடுத்து உங்கள் இணைய பெயர் (எ .டு .கா ) http://www.arivili.com என்று மாற்றி சேமித்து விடுங்கள் .




பிறகு DNS control சென்று அதில் CNAME என்ற களத்தில் www என்று ஒரு களம் இருக்கும் அதில் (ghs.google.com) என்று மாற்றி விட்டு சேமித்தால் போதும்.

பிறகு உங்கள் பிளாக்கர் சென்று settings --> tab இல் --> Publishing தேர்ந்தெடுங்கள்.



அதில் custom domain தேர்வு செய்தபின் அடுத்த பக்கத்தில் பிளாக்கர் புதிய பெயர் வேண்டுமா என்று கேட்கும் அதற்க்கு அருகில் (Switch to advanced settings) தேர்ந்தெடுங்கள்.






பிறகு advanced settings ல் உங்கள் இணைய பெயரை (எ .டு .கா ) http://www.arivili.com என்று மாற்றி சேமித்து விடுங்கள் .


இப்பொழுது உங்கள் வலைப்பூ புதிய பெயருடன் வலம் வரும்.

குறிப்பு : நீங்கள் மாற்றம் செய்த அனைத்தும் 24-48 மணிநேரத்துக்குள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

click here
மேலும் படிக்க..

Friday, January 16, 2009

இணைய பெயர் எங்கே வாங்குவது ? - 2

வாசர்களே நேற்று பிளாக்கர் கணக்கில் இருந்து கடன் அட்டை மூலமாக இணைய பெயர் பதிவு செய்வது எப்படி என்று பார்த்தோம்.

இன்று கடன் அட்டை இல்லாமல் எப்படி இணைய பெயர் வாங்குவது ? என்று பார்ப்போம் !

நீங்கள் வெளிநாடு வாழ் தமிழராக இருந்தால் (அமெரிக்கா, ஐரோப்பா, பிரித்தானியா ) நாட்டில் இருந்தால் உங்கள் வங்கி கணக்குகள் மூலமாக எளிதில் வாங்கலாம்.

எனக்கு தெரிந்து பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் வாசிப்பவராக இருந்தால் கண்டிப்பாக உங்கள் வங்கி கணக்குகள் 90% இணையம் வழியாகத்தான் நடை பெற்று வரும்.

அது மட்டும் அல்ல உங்கள் வங்கி கணக்குகள் எளிதில் (paypal) என்னும் இணைய வழி பண பரிமாற்றத்துக்கு அங்கீகரிகப்பட்டிருக்கும்.
Paypal என்னும் இந்த சேவை இணையத்தில் நீங்கள் எந்த பொருளை வாங்க நினைத்தாலும் வாங்கலாம். (உங்களுக்கு கடன் அட்டை பயன்படுத்த சிரமமாக இருந்தால் இந்த சேவை உபயோக படுத்தலாம் - பாதுகாப்பாகவும் இருக்கும் ).

இந்த paypal மூலமாக நீங்கள் எந்த இணைய பெயர் பதிவு செய்யும் நிறுவனத்திடம் பணம் செலுத்தி பெயர் வாங்கலாம்.

எனக்கு தெரிந்து சில நல்ல பெயர் பெற்ற நிறுவனங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

http://www.godaddy.com/
http://www.enom.com/
http://www.networksolutions.com/

நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்தால் உங்களிடம் ICICI, axis , அல்லது HSBC போன்ற வங்கி கணக்குகள் வைத்திருந்தால் கண்டிப்பாக இணைய வழி கணக்கை கையாளும் வசதி இருக்கும் அதன் மூலம் நீங்கள் பெயர்களை பதிவு செய்யலாம்.

இணைய பெயர் பதிவு செய்யும் இந்திய நிறுவனங்கள் :

http://www.net4.in/
http://services.sify.com/
http://hosting.rediff.com/


குறிப்பு: இணைய பெயர் பதிவு செய்யும் போது நிறுவனங்கள் வியாபார தந்திரங்களை வைத்து தேவை இல்லாத பொருளுக்கும சேர்த்து பணத்தை வசூலித்து விடுவார்கள் கவனம் தேவை .

(எடுத்துகாட்டு)
Hosting என்று டிக் அடித்து அதையும் வாங்க சொல்லுவார்கள் கவனமாக வாங்குகள் - (Domain) என்று டிக் அடித்ததை பார்த்து வாங்கவும்.


பதிவு செய்த இணைய பெயரை எப்படி உபயோகிப்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

click here
மேலும் படிக்க..

Thursday, January 15, 2009

விண்டோஸ் 7 நேரடி இறக்கம்

விண்டோஸ் 7 சோதனை ஓட்டம் இறக்கம் செய்ய கீழே குறிபிட்டுள்ள சுட்டிகளை சொடுக்கவும்.

windows 7

Official page : Windows 7 page ISO File Download Links :

Free Unlimited Download until this end of January


Windows 7 Public Beta ISO (32Bit)
Windows 7 Public Beta ISO (64bit)

click here
மேலும் படிக்க..

இணைய பெயர் எங்கே வாங்குவது? -1

வாசகர்களே இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் உங்கள் இணைய பெயர் எங்கே பதிவு செய்வது என்று பார்ப்போம்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் கடன் அட்டை மற்றும் இணைய வங்கி கணக்கு வைத்திருபோர் பட்டியல் பெருகிக்கொண்டே போகிறது .

ஆம் உங்களிடம் கடன் அட்டை அல்லது இணைய வங்கி கணக்கு இருந்தால் போதும் நீங்களும் ஒரு இணைய பெயருக்கு சொந்தகாரர் .

நீங்கள் வெளிநாட்டில் வாழும் தமிழர் என்றால் கண்டிப்பாக உங்களிடம் கடன் அட்டை இருக்கும், அதனால் எளிதாக பெயர்களை பதிவு செய்ய முடியும்.

என்னுடைய நண்பர் தமிழ்நெஞ்சம் அண்மையில் அவருடைய வலைப்பதிவை (www.tamilnenjam.org) என்னும் இணைய பெயருக்கு மாற்றினார்.

நான் அவரை அழைத்து கேட்ட போது அவர் சொன்னார் பிளாக்கர் வழியாக பெயர் பதிவு செய்தேன் என்றார்.

பிளாக்கர் கணக்கில் இருந்து எப்படி இணைய பெயர் பதிவு செய்வது ?


1. முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் உள்ள உங்கள் பிளாகை தேர்ந்துடுத்து அதில் (settings) என்னும் tabக்கு கீழே publishing என்னும் tabஐ திறக்கவும்



2. திறந்த பின் அதிலே (Custom domain) என்று ஒரு வாசகம் கொண்ட சுட்டி கொடுக்க பட்டிருக்கும் அந்த சுட்டியை திறக்கவும்.



3. சுட்டியை திறந்தவுடன் இணைய பெயர் பதிவு செய்வதற்கான பக்கம் காண்பிக்கப்படும்.

4. அதிலே நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள உங்கள் பெயரை சாதரணமாக ஒரு மின்னஞ்சல் முகவரி பதிவு செய்வதை போல் பதிவு செய்யுங்கள்.

5. உங்கள் இணைய பெயரை (.com, .net, .org, .biz) ஏதேனும் தேர்ந்தெடுத்து (check availabilty) என்று சொடுக்கவும்.

6. நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் இருந்தால் உங்களை (Google Apps) பதிவு செய்ய சொல்லும் அதிலே அவர்கள் கொடுக்கும் அம்சங்கள் மற்றும் விலை பற்றி கொடுக்கபட்டிருக்கும் .

7. மேலும் பதிவு செய்ய உங்கள் முகவரி மற்றும் இதர சாதரமான கேள்விகள் கேட்கபடும்.

8. அவ்வளவு தான் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விடும்.

அட அட டா ! உங்க கிட்டே கடன் அட்டை இல்லையா ? கவலை வேண்டாம் நாளை கடன் அட்டை இல்லாதோர் எங்கே இணைய பெயர் பதிவு செய்வது என்று பார்ப்போம் !

click here
மேலும் படிக்க..

கூகிள் விளம்பரத்தில் தமிழ் விளம்பரங்கள்

இன்று எதார்த்தமாக ஒரு ஆங்கில வலைப்பதிவில் உலாவி கொண்டு இருக்கும் போது தமிழ் சொற்களுடன் விளம்பரம் என்னை கவர்ந்து இழுத்தது அது வேறு ஒன்றும் இல்லைங்க (Tata Sky) அசின் விளம்பரம்.




இவ்வகை தமிழ் விளம்பரங்கள், தமிழ் நாட்டில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வளர்ந்து வருவதற்கு சான்றாகும்.

click here
மேலும் படிக்க..

Tuesday, January 13, 2009

இணைய பெயர் (Domain name) வாங்குவதற்கு முன் சில குறிப்புகள்

நண்பர் அறிவிழி இணைய பெயர் பதிவு செய்யணும் ஒரு யோசனை சொல்லுங்க அல்லது நல்ல பெயர் தேர்ந்தெடுத்து கொடுங்க என்றார்.

அதே நேரத்தில் இதை ஒரு பதிவாக எழுதினால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த பதிவை இடுகிறேன்.

இணைய பெயர் வாங்குவதற்கு சில குறிப்புகள்:


முதலில் பெயர் பதிவு செய்யும் முன் நாம் எந்த நோக்கத்துக்கு அந்த இணைய பெயர் வாங்க இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இணைய பெயர் உங்கள் பெயராகவும் இருக்கலாம் அல்லது நீங்கள் எழுதும் எழுத்துகளுக்கு உரிய பெயராகவும் இருக்கலாம் அல்லது வர்த்தகரீதியாகவும் இருக்கலாம்.

எடுத்துகாட்டு : நான் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த இணைய தளம் அல்லது ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்குறேன் என்றால் அந்த இணைய பெயர் எப்படி இருக்கலாம் ?

www.TamilTech.info = இங்கே Tamil என்னும் வார்த்தை நம் தமிழ் மொழியை குறிக்கிறது, அதே போல் (Tech) என்னும் வார்த்தை தொழில்நுட்பம் என்று குறிக்கிறது, கடைசியில் முடியும் (.info) என்னும் வார்த்தை தகவல் என்று குறிக்கிறது .

மொத்தத்தில் www.TamilTech.info என்னும் தளம் தமிழில் தொழில்நுட்பம் சார்ந்த தகவல் என்று அர்த்தம் அடைகிறது.

அதனால் இந்த இணைய தளம் வருவோர் எளிதில் பெயரை கண்டவுடன் இந்த தளத்தில் என்ன இருக்கும் என்று யூகிக்க முடியும், அது மட்டும் அல்ல எளிதில் மனதில் பதிந்து கொள்ளும்.

இப்படி தேர்ந்தெடுத்தல் நல்லது.

இப்படி தேர்ந்தெடுக்க உங்களுக்கு சிரமமாக இருந்தால் உங்களுக்கனே சில இணைய தளங்கள் உள்ளது அதில் உங்களுக்கு எந்த மாதிரி பெயர் வேண்டும், அந்த தளம் என்ன வகையை சார்ந்தது என்று கொடுத்தால் போதும் உங்களுக்கு சில நல்ல பெயர்கள் தேடி கொடுக்கும்.

http://www.domainsbot.com/
http://www.nameboy.com/
http://dnaz.net/
http://www.makewords.com/
http://domain-suggestions.domaintools.com/

இந்த வலை தளங்களில் தேடி பார்த்த பின் எங்கே எப்படி பதிவு செய்வது ? நாளை பார்க்கலாம் .

click here
மேலும் படிக்க..

Sunday, January 11, 2009

உங்களுக்கு தெரியுமா ? நீங்களும் கோடிஸ்வரன் !

This summary is not available. Please click here to view the post.

click here
மேலும் படிக்க..