Showing posts with label சிறப்பு சமையல் குறிப்புகள். Show all posts
Showing posts with label சிறப்பு சமையல் குறிப்புகள். Show all posts

Sunday, March 23, 2008

தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்:

தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்

வேப்பம்பூ பச்சடி:

புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ பச்சடிக்கு தனி இடம் உண்டு. வாழ்வில் இனிப்பும், கசப்பும் சேர்ந்து வரும். ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது.

எல்லாவற்றையும் ஒன்றாக ஏற்றுக் கொண்டு ஒன்றாக பாவிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் முக்கியமான சுவை கொண்டவற்றைகொண்டு வேப்பம்பூ பச்சடி செய்யப்படுகிறது.

தேவையானவை:

மாங்காய் : 2

வெல்லம் : தேவையான அளவு

வேப்பம்பூ : சிறிதளவு

உப்பு : தேவையான அளவு

பச்சைமிளகாய் ; 5

செய்முறை:

மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வேப்பம்பூவை கடாயில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சிறிதளவு நீரில் வெலத்தை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மாங்காயை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பச்சை மிளகாயை வதக்கி மாங்காயில் போட்டு கரைத்து வைத்திருக்கும் வெல்லத்துடன் சேர்த்து கலக்கிஅடுப்பில் வைத்து சூடாக்கவும்.

இதனுடன் உப்பை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் இறக்கி வைத்து, புத்தாண்டு விருந்துடன் இதையும் சேர்த்து பரிமாறி, நீங்களும் சாப்பிடுங்கள்.

வேப்பம்பூ பச்சடி உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

click here
மேலும் படிக்க..