வாசகர்களே நேற்று இணைய பெயரை எப்படி உங்கள் வலைப்பூவிற்க்கு அமைத்தல் பற்றி நேற்று பார்த்தோம் .
இன்று (DNS Control) இல்லாத வாசகர்கள் எப்படி உங்கள் இணைய பெயரை உங்கள் வலைப்பூவிற்க்கு அமைத்தல் பற்றி பார்ப்போம்.
(Zoneedit) என்னும் இலவச (DNS Control) சேவை செய்து வரும் நிறுவனத்திடம் நீங்கள் முதலில் உங்கள் இணைய பெயர், பயணாளர் பெயர் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும் .
பிறகு உங்களுக்கு activation மின்னஞ்சல் வரும் அதை activate செய்த பின் Zoneedit கணக்கில் சென்று உங்கள் இணைய பெயரை தேர்ந்த்தெடுத்த பின் அங்கே (View) என்று ஒரு சுட்டி இருக்கும் அதை சொடுக்கினால்
உங்களுக்கென ஒரு (Name Server) கொடுக்கப்பட்டிருக்கும், அந்த இரண்டு (Name Server ஐ ) உங்கள் இணைய பதிவாளர் கணக்கில் சென்று மாற்றுங்கள்.
(எ .டு .கா )
ns15.zoneedit.com
ns13.zoneedit.com
பிறகு (Zoneedit)கணக்கில் (Webforward) என்ற தேர்வு சுட்டி இருக்கும் அதை தேர்ந்தெடுத்த பின்
அதில் இரண்டு களங்கள் இருக்கும் (New Domain) மற்றும் (Destination) இருக்கும்
(New Domain) : அதில் எதுவும் செய்ய வேண்டாம்
(Destination): அதில் உங்கள் இணைய பெயரை (எ .டு .கா ) http://www.tothetech.com என்று மாற்றி (Add New) என்று சொடுக்கவும் .
பிறகு (Zoneedit) கணக்கில் Aliases (CNAME) என்ற தேர்வு சுட்டி இருக்கும் அதை தேர்ந்தெடுத்து
அதில் இரண்டு களங்கள் இருக்கும் (Alias) மற்றும் (Actual Name)
(Alias) : இதில் (www) என்று களத்தில் நிரப்பவும் .
(Actual Name) : இதில் (ghs.google.com) என்று நிரப்பவும்.
பின் (Add New Alias) என்ற பத்தானை சொடுக்கவும் .
பிறகு உங்கள் பிளாக்கர் சென்று settings --> tab இல் --> Publishing தேர்ந்தெடுங்கள்.
அதில் custom domain தேர்வு செய்தபின் அடுத்த பக்கத்தில் பிளாக்கர் புதிய பெயர் வேண்டுமா என்று கேட்கும் அதற்க்கு அருகில் (Switch to advanced settings) தேர்ந்தெடுங்கள்.

பிறகு advanced settings ல் உங்கள் இணைய பெயரை (எ .டு .கா ) http://www.tothetech.com என்று மாற்றி சேமித்து விடுங்கள் .
இப்பொழுது உங்கள் வலைப்பூ புதிய பெயருடன் வலம் வரும்.
குறிப்பு : நீங்கள் மாற்றம் செய்த அனைத்தும் 24-48 மணிநேரத்துக்குள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
பதிவுகளை இமெயிலில் பெற
11 years ago
No comments:
Post a Comment