Friday, January 16, 2009

இணைய பெயர் எங்கே வாங்குவது ? - 2

வாசர்களே நேற்று பிளாக்கர் கணக்கில் இருந்து கடன் அட்டை மூலமாக இணைய பெயர் பதிவு செய்வது எப்படி என்று பார்த்தோம்.

இன்று கடன் அட்டை இல்லாமல் எப்படி இணைய பெயர் வாங்குவது ? என்று பார்ப்போம் !

நீங்கள் வெளிநாடு வாழ் தமிழராக இருந்தால் (அமெரிக்கா, ஐரோப்பா, பிரித்தானியா ) நாட்டில் இருந்தால் உங்கள் வங்கி கணக்குகள் மூலமாக எளிதில் வாங்கலாம்.

எனக்கு தெரிந்து பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் வாசிப்பவராக இருந்தால் கண்டிப்பாக உங்கள் வங்கி கணக்குகள் 90% இணையம் வழியாகத்தான் நடை பெற்று வரும்.

அது மட்டும் அல்ல உங்கள் வங்கி கணக்குகள் எளிதில் (paypal) என்னும் இணைய வழி பண பரிமாற்றத்துக்கு அங்கீகரிகப்பட்டிருக்கும்.
Paypal என்னும் இந்த சேவை இணையத்தில் நீங்கள் எந்த பொருளை வாங்க நினைத்தாலும் வாங்கலாம். (உங்களுக்கு கடன் அட்டை பயன்படுத்த சிரமமாக இருந்தால் இந்த சேவை உபயோக படுத்தலாம் - பாதுகாப்பாகவும் இருக்கும் ).

இந்த paypal மூலமாக நீங்கள் எந்த இணைய பெயர் பதிவு செய்யும் நிறுவனத்திடம் பணம் செலுத்தி பெயர் வாங்கலாம்.

எனக்கு தெரிந்து சில நல்ல பெயர் பெற்ற நிறுவனங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

http://www.godaddy.com/
http://www.enom.com/
http://www.networksolutions.com/

நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்தால் உங்களிடம் ICICI, axis , அல்லது HSBC போன்ற வங்கி கணக்குகள் வைத்திருந்தால் கண்டிப்பாக இணைய வழி கணக்கை கையாளும் வசதி இருக்கும் அதன் மூலம் நீங்கள் பெயர்களை பதிவு செய்யலாம்.

இணைய பெயர் பதிவு செய்யும் இந்திய நிறுவனங்கள் :

http://www.net4.in/
http://services.sify.com/
http://hosting.rediff.com/


குறிப்பு: இணைய பெயர் பதிவு செய்யும் போது நிறுவனங்கள் வியாபார தந்திரங்களை வைத்து தேவை இல்லாத பொருளுக்கும சேர்த்து பணத்தை வசூலித்து விடுவார்கள் கவனம் தேவை .

(எடுத்துகாட்டு)
Hosting என்று டிக் அடித்து அதையும் வாங்க சொல்லுவார்கள் கவனமாக வாங்குகள் - (Domain) என்று டிக் அடித்ததை பார்த்து வாங்கவும்.


பதிவு செய்த இணைய பெயரை எப்படி உபயோகிப்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

click here

9 comments:

  1. for a retailer enom charges 27 $ where as Godaddy is the best to buy domain names! But .in domains are not available.

    Osai Chella
    http://zenvalley.com
    Webmedia Consultant

    ReplyDelete
  2. As a customer you can choose Authorized seller Sify for .in Domain Registrations http://services.sify.com

    ReplyDelete
  3. நண்பரே,

    அனைத்து வாடிக்கையாளர்களும் icici,axis,Hsbc யில் வங்கிகணக்கு வைத்திருக்க போவதில்லை. இந்தியாவில் பெரும்பாலும் Statebankof india,Canara bank. Indian bank. Indian Overseas Bank -ல் தான் கணக்கு வைத்திருப்பார்கள்.அடுத்த நாள் இந்த வங்கிகணக்கு வைத்திருப்பவர்கள் இணைய பெயரை ஆரம்பிக்க தொடர் வெளியிட வேண்டுகின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள தகவல்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வேலவன் நீங்கள் வேறு வங்கி கணக்கு வைத்திருந்தால் உங்கள் நண்பர் மூலமாக பதிவு செய்யலாம் அல்லது (Demand Draft) எடுத்து அருகாமையில் உள்ள நிறுவனத்திடம் பெயர் பதிவு செய்யலாமே
    இன்றைய சந்தையில் ருபாய் 450/- ஒரு பெயர் வாங்க (.com,.net.biz.info,.org) மட்டும்

    இந்த விலை நிரந்திரம் இல்லை ஏன் என்றால் அமெரிக்கா டாலர் இந்திய மதிப்புக்கு எப்போ அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது

    ReplyDelete
  6. Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்
    http://www.focuslanka.com

    ReplyDelete
  7. மிகவும் அருமையான பயனுள்ள பதிவு ஒவ்வொரு 
    துறையிலும் உங்களை போன்வர்களை இறைவன் 
    நியமித்து வைத்திருப்பதாகவே நினைக்கின்றேன்
    இது எனக்கு நல்ல வழிகாட்டுதலாக உள்ளது 
    தொடர்ந்து இதே திசையில் செல்லுங்கள் மிக்க நன்றி.. 

    ReplyDelete
  8. அனைத்து வாடிக்கையாளர்களும் இணைய பெயர் பதிவு செய்ய http://www.domain2host.in Contact 0 9841334433 044 26442138

    ReplyDelete