முன்னெப்போதும் இல்லா ஒரு
அனுபவம்
முட்படுக்கையில் கிடக்கையில்
கிடைத்திருக்கும் பீஷ்மருக்கு....
ராமர் தீக்குளிக்க சொன்னபின்
கிடைத்திருக்கலாம் அவ்வனுபவம்
சீதைக்கு....
மோட்சேயின் கட்டளைகளுக்கு
ஆபிரகாமின் பிள்ளைகள்
வேறு அனுபவமுரைத்தனர்...
ஏசுவின் மரணச்சிலுவை
அனுபவித்திருக்கும்
தெய்வ சுமையை...
ஒவ்வொருமுறையும்
அனுபவித்திருக்கும்
இருத்தலின் அவஸ்தையை
பொதுஜனம்...
-ரிஷி சேது
பதிவுகளை இமெயிலில் பெற
11 years ago
No comments:
Post a Comment