சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனை குறித்தல் வேண்டாம்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ண முற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடி இன்புற்றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
பதிவுகளை இமெயிலில் பெற
11 years ago
No comments:
Post a Comment