Thursday, January 15, 2009

விண்டோஸ் 7 நேரடி இறக்கம்

விண்டோஸ் 7 சோதனை ஓட்டம் இறக்கம் செய்ய கீழே குறிபிட்டுள்ள சுட்டிகளை சொடுக்கவும்.

windows 7

Official page : Windows 7 page ISO File Download Links :

Free Unlimited Download until this end of January


Windows 7 Public Beta ISO (32Bit)
Windows 7 Public Beta ISO (64bit)

click here
மேலும் படிக்க..

இணைய பெயர் எங்கே வாங்குவது? -1

வாசகர்களே இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் உங்கள் இணைய பெயர் எங்கே பதிவு செய்வது என்று பார்ப்போம்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் கடன் அட்டை மற்றும் இணைய வங்கி கணக்கு வைத்திருபோர் பட்டியல் பெருகிக்கொண்டே போகிறது .

ஆம் உங்களிடம் கடன் அட்டை அல்லது இணைய வங்கி கணக்கு இருந்தால் போதும் நீங்களும் ஒரு இணைய பெயருக்கு சொந்தகாரர் .

நீங்கள் வெளிநாட்டில் வாழும் தமிழர் என்றால் கண்டிப்பாக உங்களிடம் கடன் அட்டை இருக்கும், அதனால் எளிதாக பெயர்களை பதிவு செய்ய முடியும்.

என்னுடைய நண்பர் தமிழ்நெஞ்சம் அண்மையில் அவருடைய வலைப்பதிவை (www.tamilnenjam.org) என்னும் இணைய பெயருக்கு மாற்றினார்.

நான் அவரை அழைத்து கேட்ட போது அவர் சொன்னார் பிளாக்கர் வழியாக பெயர் பதிவு செய்தேன் என்றார்.

பிளாக்கர் கணக்கில் இருந்து எப்படி இணைய பெயர் பதிவு செய்வது ?


1. முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் உள்ள உங்கள் பிளாகை தேர்ந்துடுத்து அதில் (settings) என்னும் tabக்கு கீழே publishing என்னும் tabஐ திறக்கவும்



2. திறந்த பின் அதிலே (Custom domain) என்று ஒரு வாசகம் கொண்ட சுட்டி கொடுக்க பட்டிருக்கும் அந்த சுட்டியை திறக்கவும்.



3. சுட்டியை திறந்தவுடன் இணைய பெயர் பதிவு செய்வதற்கான பக்கம் காண்பிக்கப்படும்.

4. அதிலே நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள உங்கள் பெயரை சாதரணமாக ஒரு மின்னஞ்சல் முகவரி பதிவு செய்வதை போல் பதிவு செய்யுங்கள்.

5. உங்கள் இணைய பெயரை (.com, .net, .org, .biz) ஏதேனும் தேர்ந்தெடுத்து (check availabilty) என்று சொடுக்கவும்.

6. நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் இருந்தால் உங்களை (Google Apps) பதிவு செய்ய சொல்லும் அதிலே அவர்கள் கொடுக்கும் அம்சங்கள் மற்றும் விலை பற்றி கொடுக்கபட்டிருக்கும் .

7. மேலும் பதிவு செய்ய உங்கள் முகவரி மற்றும் இதர சாதரமான கேள்விகள் கேட்கபடும்.

8. அவ்வளவு தான் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விடும்.

அட அட டா ! உங்க கிட்டே கடன் அட்டை இல்லையா ? கவலை வேண்டாம் நாளை கடன் அட்டை இல்லாதோர் எங்கே இணைய பெயர் பதிவு செய்வது என்று பார்ப்போம் !

click here
மேலும் படிக்க..

கூகிள் விளம்பரத்தில் தமிழ் விளம்பரங்கள்

இன்று எதார்த்தமாக ஒரு ஆங்கில வலைப்பதிவில் உலாவி கொண்டு இருக்கும் போது தமிழ் சொற்களுடன் விளம்பரம் என்னை கவர்ந்து இழுத்தது அது வேறு ஒன்றும் இல்லைங்க (Tata Sky) அசின் விளம்பரம்.




இவ்வகை தமிழ் விளம்பரங்கள், தமிழ் நாட்டில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வளர்ந்து வருவதற்கு சான்றாகும்.

click here
மேலும் படிக்க..

Tuesday, January 13, 2009

இணைய பெயர் (Domain name) வாங்குவதற்கு முன் சில குறிப்புகள்

நண்பர் அறிவிழி இணைய பெயர் பதிவு செய்யணும் ஒரு யோசனை சொல்லுங்க அல்லது நல்ல பெயர் தேர்ந்தெடுத்து கொடுங்க என்றார்.

அதே நேரத்தில் இதை ஒரு பதிவாக எழுதினால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த பதிவை இடுகிறேன்.

இணைய பெயர் வாங்குவதற்கு சில குறிப்புகள்:


முதலில் பெயர் பதிவு செய்யும் முன் நாம் எந்த நோக்கத்துக்கு அந்த இணைய பெயர் வாங்க இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இணைய பெயர் உங்கள் பெயராகவும் இருக்கலாம் அல்லது நீங்கள் எழுதும் எழுத்துகளுக்கு உரிய பெயராகவும் இருக்கலாம் அல்லது வர்த்தகரீதியாகவும் இருக்கலாம்.

எடுத்துகாட்டு : நான் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த இணைய தளம் அல்லது ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்குறேன் என்றால் அந்த இணைய பெயர் எப்படி இருக்கலாம் ?

www.TamilTech.info = இங்கே Tamil என்னும் வார்த்தை நம் தமிழ் மொழியை குறிக்கிறது, அதே போல் (Tech) என்னும் வார்த்தை தொழில்நுட்பம் என்று குறிக்கிறது, கடைசியில் முடியும் (.info) என்னும் வார்த்தை தகவல் என்று குறிக்கிறது .

மொத்தத்தில் www.TamilTech.info என்னும் தளம் தமிழில் தொழில்நுட்பம் சார்ந்த தகவல் என்று அர்த்தம் அடைகிறது.

அதனால் இந்த இணைய தளம் வருவோர் எளிதில் பெயரை கண்டவுடன் இந்த தளத்தில் என்ன இருக்கும் என்று யூகிக்க முடியும், அது மட்டும் அல்ல எளிதில் மனதில் பதிந்து கொள்ளும்.

இப்படி தேர்ந்தெடுத்தல் நல்லது.

இப்படி தேர்ந்தெடுக்க உங்களுக்கு சிரமமாக இருந்தால் உங்களுக்கனே சில இணைய தளங்கள் உள்ளது அதில் உங்களுக்கு எந்த மாதிரி பெயர் வேண்டும், அந்த தளம் என்ன வகையை சார்ந்தது என்று கொடுத்தால் போதும் உங்களுக்கு சில நல்ல பெயர்கள் தேடி கொடுக்கும்.

http://www.domainsbot.com/
http://www.nameboy.com/
http://dnaz.net/
http://www.makewords.com/
http://domain-suggestions.domaintools.com/

இந்த வலை தளங்களில் தேடி பார்த்த பின் எங்கே எப்படி பதிவு செய்வது ? நாளை பார்க்கலாம் .

click here
மேலும் படிக்க..

Sunday, January 11, 2009

உங்களுக்கு தெரியுமா ? நீங்களும் கோடிஸ்வரன் !

This summary is not available. Please click here to view the post.

click here
மேலும் படிக்க..