பெண்மை
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ்ச் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்து களித்துநின் றாடுவோம்.
பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா.
சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்.
பதிவுகளை இமெயிலில் பெற
11 years ago
No comments:
Post a Comment